வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே மணியன் தீவு கடற்கரையில் மியான்மர் நாட்டு தெப்பம் கரை ஒதுங்கியது. இது தொடர்பாக கடலோர குழும போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மணியன் தீவு மீனவ கிராம கடற்கரையில் மிதக்கும் தெப்பம் ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. இதை பார்த்த மீனவர்கள், வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதனையடுத்து அவர்கள் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
கரை ஒதுங்கிய தெப்பம் மியான்மார் நாட்டை சேர்ந்ததும், மூங்கிலால் கட்டபட்ட மீன்பிடிக்க பயன்படுத்தகூடிய தெப்பம் என்பதும், இந்த மூங்கில் தெப்பம் 35 அடி நீளம், 10 அடி அகலம் கொண்டதாகவும், 100 மூங்கில்கள் கொண்டதும், காற்றின் வேகத்தால் மணியன் தீவு கடற்கரைக்கு வந்ததும் தெரிய வந்தது. இதே போல் கடந்த மாதம் வேதாரண்யம் கடற்கரை பகுதியில் 2 மியான்மர் நாட்டு தெப்பம் கரை ஒதுங்கியது குறிப்பிடத்தக்கதது.
The post வேதாரண்யம் கடற்கரையில் மியான்மர் நாட்டு தெப்பம் appeared first on Dinakaran.