சென்னை: ‘வேர்களைத் தேடி' திட்டம் எனது அரசியல் வாழ்க்கையில் ஒரு மைல்கல். திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு கிடைத்த பெரும் வெற்றி, இந்த ‘வேர்களைத் தேடி’ திட்டம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இன்று நடைபெற்ற அயலகத் தமிழர் தினத்தில் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றும்போது, “நான் முதலமைச்சரானதிலிருந்து, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெய்ன், அமெரிக்கா என்று உலகத்தின் எந்த பகுதிக்கு சென்றாலும், தாய்மண்ணில் இருக்கும் உணர்வை அயலகத்தில் வாழும் தமிழர்கள் எனக்கு ஏற்படுத்தினார்கள். இப்போது அதை நினைத்துப் பார்த்தாலும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும், அமெரிக்கப் பயணத்தில் எனக்கு அளித்த வரவேற்பை நினைத்துப் பார்க்கிறேன்.