புதுடெல்லி: ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்துக்கு மாறுபவர்கள், தங்கள் இபிஎஃப் கணக்கை தாங்களே மாற்றிக் கொள்ள முடியும். அதற்கான நடவடிக்கைகளை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு எடுத்துள்ளது.
வருங்கால வைப்பு நிதி கணக்கின் பாஸ்புக் பராமரிப்பு உட்பட பல்வேறு சேவைகளை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு ஆன்லைன் முறையில் வழங்கி வருகிறது. இதில் தற்போது மேலும் சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு நிறுவனத்தில் இருந்து வேறொரு நிறுவனத்துக்கு மாறுபவர்கள், தங்கள் இபிஎஃப் கணக்கை தாங்களே மாற்றிக்கொள்ள முடியும். இபிஎஃப் கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதன் மூலமும், நிலையான உறுப்பினர் தகவல்களைப் பராமரிப்பதன் மூலமும், நிறுவனத்தை மாற்றும்போது, இபிஎஃப் கணக்கை மாற்றிக்கொள்ள முடியும்.