சென்னை: ‘வேளச்சேரி-பரங்கிமலை இடையே அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரயில் சேவை தொடங்கப்படும்’ என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கடந்த 1985-ம் ஆண்டு பறக்கும் ரயில் சேவை திட்டத்தை செயல்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இதையடுத்து, முதற்கட்டமாக 1997-ம் ஆண்டு சென்னை கடற்கரை-மயிலாப்பூர் இடையே 9 கி.மீட்டர் தூரத்துக்கு ரூ.266 கோடியில் ரயில் பாதை அமைக்கப்பட்டு போக்குவரத்து தொடங்கப்பட்டது. 2-ம் கட்டமாக மயிலாப்பூர்-வேளச்சேரி இடையே ரூ.877 கோடி செலவில் ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் சேவை தொடங்கப்பட்டது.