மும்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2023 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு காயம் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி இந்த அணியில் இடம்பெற்றுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடும் வகையில் இந்தியா வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வரும் 22-ம் தேதி முதல் பிப்ரவரி 2-ம் தேதி வரையில் விளையாடுகிறது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது.