கொல்கத்தா: ஐபிஎல் 18-வது சீசன் கோலாகலமாக தொடங்கியது. இதில் முதல் போட்டியில் விளையாடும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளின் வீரர்கள் மட்டுமல்லாது நடிகர் ஷாருக்கான், பாடகர் ஸ்ரேயா கோஷல், நடிகை திஷா பதானி என பாலிவுட் சினிமா பிரபலங்கள் பங்கேற்றனர்.
வண்ணமயமான ஒளிவிளக்குகளின் மாயாஜாலம் மற்றும் பட்டாசுகள் வாணவேடிக்கை உடன் முதல் போட்டி தொடங்கியுள்ளது. இதில் டாஸ் வென்றுள்ள பெங்களூரு அணி பந்துவீச முடிவு செய்துள்ளது.