சென்னை: “மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படுவதால் மின் வாரியத்துக்கு எவ்வித வருவாயும் கிடைக்கப்போவதில்லை. எனவே, ரூ.30,000 கோடி செலவாகும் இத்திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்” என்று மின் பொறியாளர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, மின் துறை பொறியாளர்கள் அமைப்பின் தலைவர் சா.காந்தி, தமிழக மின்வாரிய பொறியாளர் சங்கத்தின் மாநில தலைவர் மனோகரன், பொதுச் செயலாளர் ஆர்.கோவிந்தராஜன் ஆகியோர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “மின்வாரியத்துக்கு 3 கோடி ஸ்மார்ட் மீட்டர் வாங்குவதற்காக ரூ.30 ஆயிரம் கோடியை செலவு செய்யப் போவதாக, தமிழக அரசு அறிவித்துள்ளது.