திருச்சி: கோடை வெப்பம் அதிகரித்து வருவதை யொட்டி கோடை வெப்பத்தின் தாக்கத்தில்லிருந்து கோயிலுக்கு வரும் பக்தர்களை காக்கும் பொருட்டு முதல்லமைச்சரின் சீறிய ஆலோசனைப்படியும், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுரைப்படியும் இந்துசமய அறநிலையத்துறை செயலர் மற்றும் ஆணையர் அவர்களின் ஆணையின்படியும் இன்று முதல் மூலவர் மூலஸ்தானம் அருகில் பக்தர்களுக்குமருத்துவ குணம் நிறைந்த மூலிகை நீர்மோர் கோடை காலம் முழுவதும் வழங்க கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.
அதை இன்று கோவில் இணை ஆணையர் செ.சிவராம்குமார் முன்னிலையில் கோயில் பணியாளர்கள் பக்தர்களுக்கு மூலிகை நீர்மோர் வழங்கினார்கள். மேலும் பக்தர்கள் சிரமம் இன்றி நடந்து செல்ல கோயில் வளாகம் முழுவதும் தரைவிரிப்புகளும் விரிக்கப்பட்டுள்ளது. கோயில் நிர்வாகத்தின் இந்த ஏற்பாடுகளை பக்தர்கள் மகிழ்வுடன் பராட்டி வருகின்றனர்.
The post ஸ்ரீரங்கம் கோவிலில் பக்தர்களுக்கு நீர் மோர்- சிறப்பு ஏற்பாடு appeared first on Dinakaran.