ஹங்கேரி: ஹங்கேரி நாட்டில் நீதித்துறை அச்சுறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக நீதிபதிகளும், நீதிமன்ற ஊழியர்களும் போராட்டத்தில் குத்திருப்பதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஹங்கேரி நாட்டில் நீதிபதிகள் மற்றும் நீதிமன்ற ஊழியர்களின் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தையில் 3 நீதிபதிகள் அடங்கிய குழுவான தேசிய நீதித்துறை கவுன்சிலுக்கு பிரதமர் விக்டர் ஓபன் அரசு கடும் அழுத்தங்களை கொடுத்துள்ளது. வெளிப்படையாக நடக்க வேண்டிய ஒப்பந்தங்கள் ரகசியமாக நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய நீதிமன்ற ஊழியர்களும் நீதிபதிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
முடாபஸ் நகரில் பேரணியாக சென்ற அவர்கள் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். நீதி விற்பனைக்கு இல்லை, நீதித்துறையின் சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளது என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தி சென்றனர். ஹங்கேரியின் முக்கிய வீதிகளில் சென்ற நீதித்துறை ஊழியர்கள் பிரதமர் விக்டரை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். அங்கேரி நீதித்துறை கவுன்சிலில் பிரதமர் மற்றும் ஐரோப்பிய யூனியனின் தலையீடு உள்ளதாக போராட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர்.
நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாடு அரசின் தலையீட்டால் தடைபடுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். அரசியல் அமைப்புக்கு உட்பட்டு அரசும் அதன் பிரதிநிதிகளும் செயல்பட வேண்டும் என்று போராட்டகாரர்கள் வலியுறுத்தினர். இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த ஹங்கேரி அரசு இன்னும் 3 ஆண்டுகளுக்குள் நீதிபதிகளின் ஊதியம் 50 சதவீதம் அதிகரிக்கப்படும் என்றும் தேசிய நீதித்துறை கவுன்சில் உறுப்பினர்களுக்கு எந்த அழுத்தமும் தரவில்லை என்று விளக்கமளித்துள்ளது. ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையில் அரசு செய்த தலையீட்டை கண்டித்து நீதிபதிகளும் நீதிமன்ற ஊழியர்களும் போராட்ட களத்தில் இறங்கியது பேசு பொருளாக மாறியுள்ளது.
The post ஹங்கேரியில் போராட்டத்தில் குதித்த நீதிபதிகள் : நீதித்துறை அச்சுறுத்தலுக்கு ஆளாகி உள்ளதாக குற்றச்சாட்டு appeared first on Dinakaran.