டாக்கா: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை திருப்பி அனுப்ப வேண்டும் என வங்கதேச இடைக்கால அரசு, இந்தியாவுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா (77) தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்தார். இந்நிலையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் அவரது அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி அந்நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.