கெய்ரோ: காசாவில் நடந்த போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின்போது ஹமாசுக்கு எதிராக பாலஸ்தீனியர்கள் முழக்கமிட்டனர். இஸ்ரேல் -ஹமாஸ் இடையே பல்வேறு நாடுகள் மேற்கொண்ட கடுமையான முயற்சியின் விளைவாக ஜனவரி மாதம் 19ம் தேதி போர் நிறுத்தம் ஏற்பட்டது. போர் நிறுத்தம் முடிவடைந்த நிலையில் போர் இடைநிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதனிடையே காசாவை குறிவைத்து இஸ்ரேல் கடந்த வாரம் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் காசாவில் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நேற்று முன்தினம் தாக்குதலில் மோசமாக சேதமடைந்த பெய்ட் லஹியாவில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போர் எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது ஹமாசுக்கு எதிராகவும், ஹமாஸ் வெளியேறு என்றும் அவர்கள் முழக்கமிட்டனர். மேலும் போரை நிறுத்து, நாங்கள் இறக்க மறுக்கிறோம், எங்கள் குழந்தைகளின் ரத்தம் மலிவானது இல்லை போன்ற பதாகைகளை அவர்கள் ஏந்தி சென்றனர்.
The post ஹமாசுக்கு எதிராக காசாவில் பாலஸ்தீனியர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.