ஜெருசலேம்: காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தலையீட்டால் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஹமாஸ் அமைப்பினர் கடந்த 2023ல் நடத்திய தாக்குதலை தடுத்து நிறுத்த தவறியதற்கும், உளவுத்துறை தோல்விக்கும் பொறுப்பேற்றும் இஸ்ரேல் ராணுவத்தின் உயர் மட்ட அதிகாரியான லெப்டினன்ட் ஜெனரல் ஹெர்சி ஹலேவி நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.
அவர் தனது ராஜினாமா கடிதத்தில்,’இஸ்ரேல் அரசை பாதுகாக்கும் பணியில் ேதால்வி அடைந்துவிட்டதால் ராஜினாமா செய்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் தாக்குதலில் 6 பேர் பலி
இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை நகரமான ஜெனினில் நேற்று இஸ்ரேல் பயங்கர ராணுவ தாக்குதல் நடத்தியது. இதில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், 35 பேர் படுகாயம் அடைந்ததாகவும் பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் ெதரிவித்துள்ளது.
The post ஹமாஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்று இஸ்ரேல் ஜெனரல் திடீர் ராஜினாமா appeared first on Dinakaran.