அகமதாபாத்: அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து, களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. இந்நிலையில், இந்தப் போட்டியின்போது மெதுவாக பந்து வீசியதற்காக மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் ஐபிஎல் ஆணையம் சார்பில் விதிக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.2-ன் கீழ் இந்த அபராதம் விதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.