சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் விளையாட்டரங்கில் திருவள்ளூர் பிரீமியர் ஹாக்கி லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டம் ஒன்றில் இந்தியன் வங்கி 7-2 என்ற கோல் கணக்கில் எஸ்.எம்.நகர் அணியை வீழ்த்தியது.
இந்தியன் வங்கி அணி சார்பில் ஆனந்த், சதீஷ் ஆகியோர் தலா இரு கோல்களையும், ஸ்டாலின் அபிலாஷ் சோமன்னா, ஆர்யன் உத்தப்பா ஆகியோர் தலா ஒரு கோலையும் அடித்தனர். தயான்ந்த் வீரன்ஸ் வருமானவரித்துறை அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிவடைந்தது.