புவனேஷ்வர்: ஆடவருக்கான எஃப்ஐஹெச் புரோ லீக் ஹாக்கி தொடரில் நேற்று புவனேஷ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா, உலக சாம்பியனான – ஜெர்மனியை எதிர்த்து விளையாடியது. இதில் இந்திய அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 4-வது நிமிடத்தில் குர்ஜாந்த் சிங் பீல்டு கோல் அடித்து அசத்தினார்.
ஆட்டத்தில் பெரும்பாலும் இந்திய அணி ஆதிக்கம் செலுத்திய நிலையில் இறுதிப்பகுதியில் ஜெர்மனி அணி கோல் அடித்து டிராவில் முடிக்க போராடியது. ஆனால் இந்திய அணியினர் டிபன்ஸில் பலமாக செயல்பட்டு ஜெர்மனி அணியை கோல் அடிக்கவிடாமல் பார்த்துக் கொண்டனர். கடைசி கால்பகுதியில் மட்டும் அந்த அணிக்கு 5 பெனால் கார்னர் வாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் அனைத்தையும் இந்திய டிபன்ஸ் தகர்த்தது.