ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் நடைபெற்று வரும் ஹாக்கி இந்தியா லீக் ஆடவர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் நேற்று தமிழ்நாடு டிராகன்ஸ் – ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் 2-2 சமநிலையில் இருந்தது. தமிழ்நாடு டிராகன்ஸ் அணி தரப்பில் 18-வது நிமிடத்தில் நேதன் எப்ராம்ஸும், 32-வது நிமிடத்தில் செல்வம் கார்த்தியும் பீல்டு கோல் அடித்தனர்.
அதேவேளையில் பெங்கால் டைகர்ஸ் அணி தரப்பில் 30-வது நிமிடத்தில் பிரதீப் சிங் சாந்து, 53-வது நிமிடத்தில் சாம் லேன் ஆகியோர் பீல்டு கோல் அடித்தனர். இதையடுத்து பெனால்டி ஷுட் அவுட்டில் ஷ்ராச்சி ராஹ் பெங்கால் டைகர்ஸ் 6-5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.