ஹாலிவுட்டில் வெளியான ‘பாராநார்மல் ஆக்டிவிட்டி’ என்ற சூப்பர் நேச்சுரல் ஹாரர் படத்தின் பாதிப்பில் இந்தியில் உருவான படம், ‘ராகிணி எம்எம்எஸ்’.
ராஜ்குமார் ராவ், கைனஸ் மோடிவாலா ஆகியோர் இதில் நடித்திருந்தனர். 2011-ல் வெளியான இந்தப் படத்தை பாலாஜி டெலிபிலிம்ஸ் தயாரித்திருந்தது. இது வெற்றி பெற்றதை அடுத்து இதன் அடுத்த பாகம் 2014-ல் வெளியானது. சன்னி லியோன் நாயகியாக நடித்த இந்தப் படமும் வரவேற்பைப் பெற்றதை அடுத்து 2 அதன் 3-ம் பாகம் இப்போது உருவாகிறது.