கேம்பிரிட்ஜ்: ஹார்வர்டு பல்கலைகழகத்திற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த தடை உத்தரவால் சர்வதேச மாணவர்கள் கவலை அடைந்துள்ளனர். அமெரிக்காவின் பிரபலமான ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டில் இருந்து மாணவர்கள் சேர்வதற்கு டிரம்ப் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்த தடையை பல்கலைக்கழகம் ஏற்க மறுத்துள்ளது. உலக அளவில் பிரபலமான ஹார்வர்டு பல்கலைக்கழகம் 389 ஆண்டுகள் பழமையானது.இந்த தடையால் சர்வதேச மாணவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தனது முதலாமாண்டு படிப்பை முடித்த பெல்ஜியம் இளவரசி எலிசபெத், அடுத்த ஆண்டு மீண்டும் படிப்பை தொடர முடியுமா என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. அதே போல் கனடா பிரதமர் மார்க் கார்னியின் மகள் கிளியோ கார்னியும் அங்கு முதலாம் ஆண்டு படித்து வருகிறார். அவரது படிப்பும் சிக்கலாகி உள்ளது. இதுபோல ஹார்வர்டில் படிக்கும் பல சர்வதேச மாணவர்கள் தங்கள் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருப்பதாக வருந்துகின்றனர்.
* டிரம்ப் உத்தரவுக்கு இடைக்கால தடை
வெளிநாட்டு மாணவர்களை சேர்ப்பதை தடுக்கும் டிரம்ப் உத்தரவை எதிர்த்து ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்திருந்தது. இதை விசாரித்த நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
The post ஹார்வர்டு பல்கலை. மீதான தடை அதிபர் டிரம்பின் உத்தரவால் சர்வதேச மாணவர்கள் கவலை: பெல்ஜியம் இளவரசி, கனடா பிரதமர் மகள் படிப்பு சிக்கல் appeared first on Dinakaran.