புதுடெல்லி: நாட்டில் சுவாச நோய்களின் தற்போதைய நிலைமை மற்றும் அந்நோய்களை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார நடவடிக்கைகளின் நிலை குறித்து ஆய்வு நடத்திய மத்திய சுகாதார செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா, 2001-ஆம் ஆண்டு முதல் உலக அளவில் ஹெச்எம்பிவி பரவி வருவதால், பொது மக்களுக்கு இதனால் எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாட்டில் சுவாச நோய்களின் தற்போதைய நிலைமை மற்றும் அந்நோய்களை எதிர்கொள்வதற்கான பொது சுகாதார நடவடிக்கைகளின் நிலை குறித்து மத்திய சுகாதார செயலாளர் புன்யா சலிலா ஸ்ரீவஸ்தவா தலைமையில் நேற்று (ஜனவரி 06) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் மெய்நிகர் முறையில் இந்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.