கிரிக்கெட் விளையாட்டுக்கான விதிமுறைகளை உருவாக்குவது இங்கிலாந்திலுள்ள மெரில்போன் கிரிக்கெட் கிளப் எனப்படும் எம்சிசி ஆகும். எம்சிசி உருவாக்கியுள்ள கிரிக்கெட் விதிமுறை புத்தகத்தில் 33-வது விதியாக இருப்பது ‘ஹேண்டில் தி பால்’ விதிமுறையாகும்.
எம்சிசியின் 33-வது விதிமுறை கூறுவது இதுதான். ‘ஹேண்டில் தி பால்’ அல்லது பந்தைக் கையாள்வது என்ற விதியின்படி பேட்ஸ்மேனுக்கு நடுவர் அவுட் கொடுக்கலாம். அதாவது, களத்தில் பந்துவீச்சாளர் பந்தை வீசிய பின்னர் பேட்ஸ்மேன் வேண்டுமென்றே தனது ஒரு கை அல்லது இரண்டு கைகளால் கிரிக்கெட் மட்டையைப் பிடிக்காமல் பந்தைத் தொட்டால், பந்தைக் கையாண்டதாக அர்த்தமாகும்.