தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகம் மற்றும் புதுச்சேரி நிலப்பகுதியை ஒட்டிய ஆழமற்ற கடல் பகுதிகளில் 30 ஆயிரம் சதுர கிமீ பரப்பிலும், ஆழமான கடல் பகுதியில் 95 ஆயிரம் சதுர கிமீ பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் இருப்பு உள்ளதாக மத்திய பெட்ரோலிய அமைச்சகம் கண்டறிந்துள்ளது. தமிழக ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிப்பை கடந்த மாதம் 11-ம் தேதி மத்திய அரசு வெளியிட்டிருந்தது. குறிப்பாக திறந்த வெளி அனுமதி அடிப்படையில் 10-வது சுற்று ஏல அறிவிப்பில் ராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை கடல் பகுதியில் 9,990 சதுர அடி பரப்பில் எண்ணெய், எரிவாயு எடுக்க ஏலம் கோரப்பட்டுள்ளது.