தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள 213 பாகிஸ்தானியர்களும் இன்று 27-ம் தேதி இரவுக்குள் பாகிஸ்தான் திரும்ப வேண்டும் என ஹைதராபாத் டிஜிபி அலுவலகத்தில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சக உத்தரவின் பேரில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக டிஜிபி அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஹைதராபாத் நகரில் 213 பாகிஸ்தானியர்கள் உள்ளனர். இவர்களில் சிலர் சுற்றுலா விசா, சிலர் மருத்துவ விசாக்களிலும் வந்து தங்கி உள்ளனர். இவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு விட்டதால், இன்று 27-ம் தேதி இரவுக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் இருந்து அந்த 213 பேருக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் தற்போது வெறும் 4 குடும்பத்தினர் மட்டுமே ஹைதராபாத்தில் தங்கி உள்ளனர். இவர்களும் இன்று இரவுக்குள் பாகிஸ்தான் செல்ல வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிட தக்கது.