இந்தி திரைப்பட இயக்குநரும் நடன இயக்குநருமான ஃபாரா கான், ஷாருக்கான் நடிப்பில் ‘ஓம் சாந்தி ஓம்’ உட்பட சில படங்களை இயக்கி இருக்கிறார். இவர் சேனல் ஒன்றில் ‘செலிபிரிட்டி மாஸ்டர்செஃப்’ என்ற நிகழ்ச்சியின் நடுவராக இருக்கிறார். சில நாட்களுக்கு முன் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் ஹோலி பண்டிகை குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவர் மீது மும்பையை சேர்ந்த விகாஷ் ஃபதக், கர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத் துள்ளார். அதில், “ஹோலி பண்டிகை குறித்து ஃபாரா கான் தெரிவித்துள்ள கருத்துமத நம்பிக்கைகளைப் புண்படுத்துவதாக இருக்கிறது. அவர் இழிவான வார்த்தையை பயன்படுத்தி இருக்கிறார். அவரது கருத்துகள் இரு சமூகத்தினரிடையே மோதலை உருவாக்கும் வகையில் உள்ளதால் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.