கோவில்பட்டி : பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்கள் எடுத்து கோவில்பட்டி இரட்டை சகோதரர்கள் அசத்தியுள்ளனர். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், கோவில்பட்டி காமராஜ் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் பயிலும் இரட்டையர்கள் ஹரிஹரன், செந்தில் நாதன் ஆகியோர் 457 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒரே மொத்த மதிப்பெண்கள் எடுத்துள்ள இரட்டை சகோதரர்களை பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளனர். மாணவர் ஹரிஹரன் தமிழில் 94, ஆங்கிலத்தில் 91, கணிதத்தில் 83, அறிவியல் 94, சமூக அறிவியல் 95 மதிப்பெண்கள் என பாடவாரியாக எடுத்துள்ளார். மாணவர் செந்தில் நாதன் தமிழில் 83, ஆங்கிலத்தில் 91, கணிதத்தில் 93, அறிவியலில் 100, சமூக அறிவியலில் 90 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.
ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டை சகோதரர்களை பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், சக மாணவர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.‘‘எதிர்பார்க்கவில்லை மகிழ்ச்சி, ஆச்சரியம்’’ ஒரே மதிப்பெண் எடுத்த இரட்டையர்கள் ஹரிஹரன், செந்திநாதனின் தந்தை சங்கர் கணேஷ், கோவில்பட்டி வழக்கறிஞர் சங்கத் தலைவராக உள்ளார். இவரது மனைவி மீனா.
கோவில்பட்டி ராஜூவ் நகர் 6வது தெருவை சேர்ந்தவர். ஒரே பள்ளியில் வெவ்வேறு வகுப்புகளில் படித்தோம். 450 மதிப்பெண்களுக்கு மேல் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் ஒரே மதிப்பெண்ைண எதிர்பார்க்கவில்லை. இது மகிழ்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது. ஆசிரியர்கள் நன்கு பயிற்சி அளித்தனர். பள்ளி நேரத்தை தவிர்த்து தினமும் 4 மணி நேரம் படிப்பதை வழக்கமாக கொண்டிருந்தோம் என மாணவர்கள் ஹரிஹரன், செந்தில்நாதன் தெரிவித்தனர்.
The post 10ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் எடுத்து அசத்திய கோவில்பட்டி இரட்டையர்கள் appeared first on Dinakaran.