புதுடெல்லி: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் கடத்தலில் பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு வெளியாகி உள்ளது. இந்த தகவலை, நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதித் துறையின் இணை அமைச்ச பங்கஜ் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மக்களவையில் எழுந்த ஒரு கேள்விக்கான எழுத்துபூர்வமாக நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி பதிலளித்துள்ள்ளார். அதில், ”உலகில் அதிகம் கடத்தப்படும் பொருட்களில் தங்கம் ஒன்றாகும். இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் தங்கம் அதிக அளவில் கடத்தப்படுகிறது. அதைப் பிடிக்க நிறுவனங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றன. மேலும், ஒவ்வொரு ஆண்டும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்படுகிறது. இது தொடர்பான தகவல்கள் அரசாங்கத்தால் நாடாளுமன்றத்தில் வழங்கப்பட்டுள்ளன.