காஸாவில் கட்டாய இடப்பெயர்வின் குழப்பம் மற்றும் பயங்கரமான சூழ்நிலைக்கு மத்தியில், காலணி அணியாத ஒரு சிறுவன், தனது தம்பியைச் சுமந்து கொண்டு, கண்ணீரில் குரல் அடைக்க “யா உம்மா” (அம்மா) என்று மீண்டும் மீண்டும் கத்திக் கொண்டு ஓடும் காட்சி உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்தக் காட்சிகளின் மூலம் ஒரு எகிப்திய உதவி குழு அந்தக் குழந்தைகளைக் கண்டுபிடித்து, காஸாவின் தெற்கில் உள்ள அவர்களின் பெற்றோருடன் மீண்டும் சேர்க்க முடிந்தது.