சென்னை: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன. தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு உதவி பெற்ற பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் படிக்கும் சுமார் 20 லட்சம் மாணவ, மாணவியருக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க இருப்பதை அடுத்து, முன்னதாக மேற்கண்ட வகுப்புகளுக்கான செய்முறை தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.
பிளஸ் 2 வகுப்பு செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ம் தேதி முதல் 14ம் தேதி வரையும், பிளஸ் 1 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 15ம் தேதி முதல் 21ம் தேதி வரையும், பத்தாம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு 22ம் தேதி முதல் 28ம் தேதி வரையும் நடக்கும். இதையடுத்து, பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்ட பிறகு பிளஸ் 2 வகுப்புக்கு மே 9ம் தேதியும், பிளஸ் 1 வகுப்புக்கு மே 19ம் தேதியும், பத்தாம் வகுப்புக்கு மே 19ம் தேதியும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
The post 10, 12ம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வுகள்: இன்று தொடக்கம் appeared first on Dinakaran.