புதுடெல்லி: “100 நாள் வேலைத் திட்டத்தின் பாக்கியை வட்டியோடு கொடுப்பீர்களா?” என்று நாடாளுமன்ற மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார்.
இது குறித்து நாடாளுமன்ற மக்களவையின் கேள்வி நேரத்தில் தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழி கருணாநிதி பேசுகையில், “மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி (நூறு நாள் வேலை வாய்ப்பு) திட்டத்தின் கீழ் வழங்கப்பட வேண்டிய ஊதியத்தை தாமதமாக வழங்கக் கூடாது. இதை, 15 நாட்கள் தாமதம் செய்தால் அதற்குண்டான வட்டியை சேர்த்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பது இத்திட்டத்தின் விதி. தமிழ்நாட்டில் உபகரணங்கள் – ஊதியம் என்ற வகையில சுமார் ரூ.4,034 கோடி தொகை கடந்த 5 மாதங்களாக நிலுவையில் உள்ளது.