கம்பம்: தமிழக – கேரள எல்லையான குமுளி அருகே தேக்கடியில் உள்ள கல்லறைக்கல் மைதானத்தில் வேளாண் தோட்டக்கலை சங்கம், குமுளி பஞ்சாயத்து நிர்வாகம், மண்ணாரத்தரை கார்டன் இணைந்து கடந்த மார்ச் 28 முதல் மலர்க்கண்காட்சி நடத்தி வருகின்றன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மலர் செடிகள், மூலிகைச் செடிகள், அலங்காரச் செடிகள் மற்றும் தோட்டம் அமைக்க தேவையான செடிகள், நாற்றுகள் இடம் பெற்றுள்ளன. கண்காட்சியையொட்டி வேளான் கருத்தரங்கம், பார்வையாளர்களுக்கான மலர் அலங்கார போட்டி, சமையல் போட்டி நடத்தப்படுகின்றன. மேலும் இன்னிசை கச்சேரி, ஆடல், பாடல் நிகழ்ச்சி, மீன் கண்காட்சி, வீட்டு வளர்ப்பு விலங்குகள் கண்காட்சி இடம் பெற்றுள்ளது. குழந்தைகளுக்காக விளையாட்டரங்கமும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சி ஏப்.20 தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை கண்காட்சி நடைபெறுகிறது. கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகள், மலர்களுக்கு நடுவில் நின்று செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர். மேலும் விற்பனைக்கு வைக்கபட்டுள்ள பூக்கள் மற்றும் மலர்ச்செடிகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். மாணவர்களுக்கு சலுகை கட்டணம் வழங்கப்படுகிறது. ஏழு வயதிற்கு குறைவானவர்களுக்கு கட்டணமில்லை என நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தாமஸ் தெரிவித்துள்ளார்.
The post 100 வகை பூக்களுடன் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த தேக்கடி மலர்க்கண்காட்சி appeared first on Dinakaran.