விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம், ‘நாகபந்தம்’. இந்தப் படம் இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோயில்களைச் சுற்றியுள்ள மர்மத்தை ஆராய்கிறது. இந்த புனித தலங்களைப் பாதுகாக்கும் நாகபந்தத்தின் பண்டைய சடங்குகளை மையமாகக் கொண்டு, இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அவினாஷ், அகோரியாக நடிக்கிறார்.
அதிநவீன தொழில்நுட்பத்துடனும் விஎஃப்எக்ஸ் மற்றும் அதிரடி ஆக்‌ஷனுடன் பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகி வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. சவுந்தர் ராஜன் ஒளிப்பதிவு செய்கிறார். அபே இசையமைக்கிறார். கதை, திரைக்கதை எழுதி அபிஷேக் நாமா இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. இதன் ‘ப்ரீ-லுக்’ போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.