சென்னை: மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட 147 புதிய வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து மக்கள் பயண்பாட்டிற்கு தொடங்கிவைத்தார். தமிழ்நாடு அரசு மக்கள் நல்வாழ்வுத்துறையில் அவசரகால ஊர்திகளை சீரான இடைவேளியில் மாற்றி வருகிறது.
தன்படி சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து 108 அவசரகால ஊர்தி, மலை மற்றும் நிலப்பரப்பிற்கான புதிய 4 சக்கர ஊர்திகள், இலவச அமரர் ஊர்தி, இலவச தாய் சேய் நல ஊர்தி மற்றும் அவசரகால ஊர்திகள் என மொத்தம் 30கோடியே 28 லட்சம் 57 ஆயிரம் ரூபாய் செலவில் 147 ஊர்திகளை முதல்வர் தொடங்கிவைத்தார். தமிழகத்தை பொறுத்தவரையில் அவசரகால ஊர்திகள் விபத்தில் சிக்குபவர்களை மீட்கும் பணியில் இந்த ஊர்திகள் முக்கிய பங்காற்றுகிறது. அவற்றிக்கான கூடுதல் ஊர்திகளை தமிழ்நாடு முதல்வர் தொடங்கிவைத்தார்.
The post 108 ஆம்புலன்ஸ் உள்ளிட்ட 147 புதிய வாகனங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கிவைத்தார் appeared first on Dinakaran.