புதுடெல்லி: அதானி குழுமத்தின் தலைமை நிதி அதிகாரி ஜுகேஷிந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் ஒரு ஒப்பந்தம் தொடர்பாக கடந்த சில நாட்களாக பல செய்திகள் வெளியாயின. அதானி குழுமத்தின் ஒட்டு மொத்த தொழிலில், அதானி கிரீன் எனர்ஜியின் இந்த ஒப்பந்தம் வெறும் 10 சதவீதம்தான். அதானி குழுமத்தில் மொத்தம் 11 நிறுவனங்கள் உள்ளன. இதில் எந்த நிறுவனமும் குற்றச்சாட்டுக்கு உட்படுத்தப்படவில்லை.
அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கில் எந்த நிறுவனமும் தவறு செய்துவிட்டதாக குற்றம்சாட்டப்படவில்லை. அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீதான அமெரிக்க பங்குச்சந்தை மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.