கோவை: தமிழக அரசு சார்பில் கோவை குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தொழிலாளர் தங்கும் விடுதிக்கு தொழில் நிறுவனத்தினர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அறைகளுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது.
கோவை – பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது ‘சிட்கோ’ தொழிற்பேட்டை வளாகம். தமிழக அரசு சார்பில் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் பயன்பெற உதவும் வகையில் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதி திட்டத்திற்கு கடந்த 2022-ம் ஆண்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். சமீபத்தில் இந்த விடுதி திறக்கப்பட்டது.