சூரியக் குடும்பத்திற்கு வெளியே பூமியிலிருந்து சுமார் 1,127 லட்சம் கோடி கி.மீ. தொலைவில் அமைந்துள்ள K2-18b என்ற புறக்கோள் குறித்துதான் உலகம் இன்று பேசுகிறது. அதற்கு என்ன காரணம்? இந்தப் புறக்கோளில் உயிர்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதும் அளவுக்கு அப்படி என்ன கிடைத்தது? ஆய்வுக்குழுவை வழிநடத்திய விஞ்ஞானி பேராசிரியர் நிக்கு மசூசூததன் பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்து கொண்ட தகவல்கள் இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.