சென்னை : தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகின. முடிவுகளை www.tnresults.nic.in, https://results.digilocker.gov.in/ஆகிய இணையதள முகவரிகளில் தெரிந்துகொள்ளலாம்.
*தேர்வு நடைபெற்ற நாட்கள் 03.03.2025 முதல் 25.03.2025 வரை
*தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் நாள் 08.05.2025
*தேர்வெழுதிய மொத்தப் பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை : 7,92,494
*மாணவியர்களின் எண்ணிக்கை : 4,19,316
*மாணவர்களின் எண்ணிக்கை : 3,73,178
தேர்ச்சி விவரங்கள்
*தேர்ச்சி பெற்றவர்கள் : 7,53,142 (95.03%)
*மாணவியர் 4,05,472 (96.70 %) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
*மாணவர்கள் 3,47,670 (93.16 %) தேர்ச்சி அடைந்துள்ளனர்.
*மாணவர்களை விட 3.54 % மாணவியர் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
*தேர்விற்கு வருகைப்புரியாதவர்கள்: 10,049
* கடந்த மார்ச்- 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்வில், தேர்வெழுதிய மாணாக்கர்களின் எண்ணிக்கை 7,60,606. தேர்ச்சி பெற்றோர் 7,19,196. தேர்ச்சி சதவிகிதம் 94.56 %
*கடந்த மார்ச் 2024 பொதுத்தேர்வினை விட இவ்வாண்டு தேர்ச்சி 0.47% சதவிகிதம் கூடுதலாக உள்ளது.
கூடுதல் விவரங்கள்
*மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 7,513.
*100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 2,638.
*100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை – 436.
பெண்கள் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 6.36% சதவிகிதம் கூடுதலாகவும், இருபாலர் பயிலும் பள்ளிகள் ஆண்கள் பள்ளிகளை விட 5.16% சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.
*ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களின் எண்ணிக்கை – 26,887.
*ஏதேனும் ஒரு பாடத்தில் 100 மதிப்பெண்கள் பெற்ற அரசுப்பள்ளி மாணாக்கர்களின் எண்ணிக்கை- 2,853.
*தேர்வெழுதிய மாற்றுத் திறனாளி மாணாக்கர்களின் எண்ணிக்கை 8,019. தேர்ச்சி பெற்றோர் 6 7,466 (93.10 %).
*தேர்வெழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 140 தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 130 (92.86%).
*தேர்வெழுதிய தனித்தேர்வர்கள் எண்ணிக்கை 16,904. தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 5,500 (32.54%).
The post 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு : தேர்ச்சி விகிதத்தில் அரியலூர் மாவட்டம் முதலிடம்; 91.94% தேர்ச்சியுடன் அரசு பள்ளிகள் அசத்தல் appeared first on Dinakaran.