துபாய்: ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா – நியூஸிலாந்து அணிகள் துபாயில் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மோதுகின்றன.
ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் வங்கதேசம், பாகிஸ்தான், நியூஸிலாந்து அணிகளை தோற்கடித்த நிலையில் அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் கால்பதித்தது. மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி லீக் சுற்றில் பாகிஸ்தான், வங்கதேசம் அணிகளை வீழ்த்திய நிலையில் இந்தியாவிடம் 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. அரை இறுதியில் 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியிருந்தது.