12 வருட கால நீண்ட காத்திருப்புக்கு பிறகு விஷால் நடிப்பில், சுந்தர் சி இயக்கத்தில் ‘மதகஜ ராஜா’ திரைப்படம் ஜனவரி 12 ஆம் தேதி அன்று வெளியானது. 2013 ஆம் ஆண்டே இந்த திரைப்படம் வெளியாக வேண்டியது, ஆனால் தயாரிப்பாளர் தரப்பில் ஏற்பட்ட பணச் சிக்கலால் இந்த படம் பல்வேறு தடைகளை தாண்டி தற்போது திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.