புதுடெல்லி: பிஹார் மாநிலத்தில் இருந்து பிரித்து ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டு 24 ஆண்டுகள் முடிந்துள்ளன. இக்கால கட்டத் தில் சுயேச்சையான மதுகோடா உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 13 பேர் முதல்வர்களாக இருந்துள்ளனர். அவர்களில் பாஜக.வின் அர்ஜுன் முண்டா. ஜேவிஎம் கட்சியின் சிபு சோரன் மற்றும் அவரது மகன் ஹேமந்த் சோரன் ஆகியோர் 3 முறை முதல்வராக பதவி வகித்தனர் கடந்த 2014 தேர்தலுக்கு பின் பாஜக.வின் ரகுபர்தாஸ் மட்டுமே 5 வருடம் முதல்வராக இருந் தார். இவர் தற்போது ஒடிசா ஆளுநராக உள்ளார். முதல் வர் ஹேமந்த் சோரன் சிறை யில் இருந்த போது, இடைக்கால முதல்வராக சம்பய் சோரன் இருந்தார்.
இதற்கிடையில், இங்கு குடிய ரசு தலைவர் ஆட்சி 3 3 முறை அமல் படுத்தப்பட்டன. இதனால், எந்த மாநிலத்திலும் இல்லாத வகை யில் நிலையான ஆட்சி ஜார்க் கண்டில் அமையவில்லை. கடந் த 24 ஆண்டுகளாக 4 சட்டப்பேர வை தேர்தலை சந்தித்த ஜார்க் கண்டில் ஒரு முதல்வரும் முழு மையாக 5 ஆண்டு கால ஆட் சியை நிறைவு செய்யவில்லை. ஜார்க்கண்டின் மொத்த தொகுதிகள் 81. இங்கு தனி மெஜாரிட்டி ஆட்சிக்கு 41 எம்எல் ஏ.க்கள் தேவை. ஆனால், இது வரை எந்த ஒரு அரசியல் கட் சியும் 41 எம்எல்ஏ.க்களின் பலத் தை பெறவில்லை. கடைசியாக கடந்த 2014 சட்டப்பேரவை தேர் தல் மட்டும் அதிகபட்சமாக 37 தொகுதிகளை பாஜக பெற்றது.