அடுத்த மாதம் டப்ளினில் அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஜேக்கப் பெத்தேல் அறிவிக்கப்பட்டுள்ளார். 21 வயது ஆல்ரவுண்டரான ஜேக்கப் பெத்தேல் அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்து அணியின் இளைய கேப்டன் ஆனார். இதன் மூலம் 136 ஆண்டுகால வயது சாதனையை முறியடித்துள்ளார்.
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபி கடும் சவாலான கடும் உடலுழைப்பைக் கோரிய டெஸ்ட் தொடரில் ஆடிய பிறகே ரெகுலர் டி20 கேப்டன் ஹாரி புரூக் இந்தத்ட் தொடரில் ஆடவில்லை என்பதால் பெத்தேல் கேப்டனாக உயர்த்தப்பட்டுள்ளார். ஆனால், தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக ஆடப்படவிருக்கும் ஒருநாள், டி20 தொடருக்கு ஹாரி புரூக் கேப்டனாகத் திரும்புவார்.