அலிகர்: ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் 14-ஆண்டுகளுக்குப் பிறகு அலிகாருக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கட்சியை வலுப்படுத்துவது குறித்து அவர் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளுடன் கலந்துரையாட உள்ளார்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் அலிகாருக்கு மேற்கொள்ளும் ஐந்து நாள் சுற்றுப் பயணம் நேற்று தொடங்கியது. சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக நேற்று அவர் அந்த நகரத்தில் வந்திறங்கினார். பாகவத்தின் வருகையை அடுத்து அந்த நகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.