புதுடெல்லி: நாடு முழுவதும் 14 மாநிலங்களில் உள்ள 48 சட்டப்பேரவை தொகுதிகள், கேரளாவின் வய நாடு மற்றும் மகாராஷ்டிராவின் நாந்தேடு மக்களவை தொகுதிகளில் கடந்த 13 மற்றும் 20-ம் தேதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்றது.
உத்தர பிரதேசத்தில் 9, ராஜஸ்தானில் 7, மேற்கு வங்கத்தில் 6, அசாமில் 5, பிஹார், பஞ்சாபில் தலா 4, கர்நாடகாவில் 3, கேரளா, மத்திய பிரதேசம், சிக்கிமில் தலா 2 தொகுதிகள் குஜராத், உத்தராகண்ட், மேகாலயா, சத்தீஸ்கரில் தலா ஒரு சட்டப் பேரவை தொகுதிகளில் இடைத் தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியாயின. மக்களவை தொகுதி இடைத் தேர்தலில் கேரளாவின் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி வெற்றி பெற்றார். மகாராஷ்டிராவின் நாந்தேடு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட டாக்டர் ஹம்பார்டே வெற்றி பெற்றார்.