தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை தலைப்பு – சட்டத்திற்கு புறம்பாக 15 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட 5 நபர்களுக்கு தலா 5 வருட சிறைதண்டனை மற்றும் ரூ.20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் நகர உட்கோட்டம். மேற்கு இரயில் நிலையம் அருகில் கஞ்சா எனும் போதைப்பொருள்கள் விற்பனை செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் சந்தேகத்திற்குரிய நபர்களை சோதனை செய்த போது அவர்களிடமிருந்த 15 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டு தஞ்சாவூர் நகர மேற்கு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேற்படி இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரியான காவல் ஆய்வாளர் திருமதி.சந்திரா அவர்களால் எதிரிகளான தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 1.ஆசை (வயது-28), 2. செல்வராமர்(வயது-40), 3.சசிக்குமார் (வயது-36), சரித்திர பதிவேடு குற்றவாளியான சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 4.கார்த்தி(எ) லூசுகார்த்தி(வயது-29) மற்றும் 5. பிரபு(வயது-26) ஆகியோரை 04.10.2023-ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு வழக்கின் புலன்விசாரணை முடித்து எதிரிகளின் மீது 19.10.2023-ம் தேதி நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தார்.
இவ்வழக்கினை விசாரணை செய்த தஞ்சாவூர் மாவட்ட இன்றியமையா பொருட்கள் சட்ட வழக்குகளுக்கான அமர்வு நீதிமன்ற நீதிபதி (EC COURT) திரு.சுந்தர்ராஜன் அவர்கள் இன்று 27.03.2025 வழக்கின் எதிரிகளான தேனீ மாவட்டத்தைச் சேர்ந்த 1.ஆசை(வயது-28). 2.செல்வராமர்(வயது-40), 3.சசிக்குமார்(வயது 36), சரித்திர பதிவேடு குற்றவாளியான சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 4.கார்த்தி(எ) லூசுகார்த்தி(வயது-29) மற்றும் 5.பிரபு(வயது-26) ஆகியோருக்கு தலா 5 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.20.000/- அபராதத் தொகையும் விதித்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் திறம்பட பணிப்புரிந்தமைக்காக காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற காவலர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினர்.
The post 15 கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த சரித்திரபதிவேடு குற்றவாளி உட்பட 5 நபர்களுக்கு தலா 5 வருட சிறை தண்டனை! appeared first on Dinakaran.