*குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்
ஊட்டி : ஓய்தியதாரர்கள் குறைகளை மிகுந்த கவனத்துடன் பரிசீலனை செய்து 15 நாட்களில் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் ஓய்வூதியர்களுக்கான குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரு தலைமை வகித்தார்.
இதில், ஓய்வூதிய சங்கங்கள் மற்றும் ஓய்தியதார்களிடமிருந்து பெறப்பட்ட 25 மனுக்களின் மீது ஆய்வு மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க தொடர்புடைய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும், நீலகிரி மாவட்டத்தில், ஓய்தியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், மேற்கொள்ளப்பட்ட மருத்துவச் செலவீனங்களை மீளக்கோரி சமர்ப்பிக்கப்பட்டு நீண்ட காலமாக நிலுவையில் உள்ள விண்ணப்பங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க யுனைடெட் இந்திய இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நீலகிரி கோட்ட மேலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
நீலகிரி மாவட்ட மருத்துவ காப்பீடு ஒருங்கிணைப்பாளர்களை தொடர்பு கொள்பவர்களுக்கு வாட்ஸ்அப் செயலி மூலம் அனுப்பப்படும் ஓய்தியதாரர்களின் குறைகளுக்கு தகுந்த நிவர்த்தி அறிக்கையினை வாட்ஸ் அப் செயலி மூலம் தெளிவுரை நடவடிக்கை விவரம் 24 நேரத்திற்குள் அனுப்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
மருத்துவச் செலவினங்களை மீளக்கோரும் விண்ணப்பங்கள் தொடர்பான விவர அறிக்கையினை மாதந்தோறும் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் நீலகிரி கோட்ட மேலாளர் அலுவலகத்துடன் ஒத்திசைவு செய்ய வேண்டுமெனவும், அதனை மாவட்ட கருவூல அலுவலர் வாயிலாக கலெக்டரிடம் வழங்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.மேலும், ஊராட்சி ஒன்றிய ஓய்தியதாரர்களுக்கு உதவி இயக்குநர் (உள்ளாட்சி நிதி தணிக்கை) அலுவலரால் குறைதீர்க்கும் கூட்டம் நடத்த உதவி இயக்குநருக்கு (ஊராட்சி நிதி தணிக்கை) அறிவுறுத்தப்பட்டது.
பொதுவாக ஓய்தியதாரர்கள் குறைகளை மிகுந்த கவனத்துடன் பரிசீலனை செய்து 15 தினங்களுக்குள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.
கூட்டத்தில், கூடுதல் இயக்குநர் கருவூல கணக்குத்துறை இயக்குநரகம், ஓய்தியர்களை ‘களஞ்சியம்” மொபைல் ஆப் பதிவிறக்கம் செய்து தங்களது ஓய்தியர்களின் தனிப்பட்ட விவரம், வருமான வரி விவரம்,மாதந்தோரும் ஓய்வூதியம் ஆகியவற்றை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும், புதுப்பித்தல் பதிவினை செய்வது தொடர்பான வழிமுறைகளையும் தெரிவித்தார்.
இதில், சென்னை கருவூல மற்றும் கணக்குத்துறை இயக்குநர் நிருபாராணி, மண்டல இணை இயக்குநர் பால்முருகன், கருவூலக் கணக்கு இயக்குநரகம் கண்காணிப்பாளர் சந்திரசேகரன்,மாவட்ட கருவூல அலுவலர் மோகனசுந்தரம், இணை இயக்குநர் (மருத்துவ நலப்பணிகள்) ராஜசேகரன்,கலெக்டரின் நேர்முக உதவியர்கள் கண்ணன் (கணக்குகள்), மைதிலி (வளர்ச்சி), ஓய்வூதியதாரர்கள் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
The post 15 நாட்களுக்குள் ஓய்வூதியர்கள் குறைகளை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் appeared first on Dinakaran.