அங்காரா: ஹமாஸ்- இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்பட்ட 15 பாலஸ்தீன கைதிகள் துருக்கி வரவேற்கும் என்று அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 15 பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் எகிப்துக்கு முதல் கட்ட நாடு கடத்தலுக்கு பின் துருக்கி வருகிறார்கள். பாலஸ்தீனியர்களின் வருகையை எளிதாக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அங்காரா ஏற்றுக்கொள்வதற்கு தயாராகவுள்ள பாலஸ்தீனியர்கள் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. இவர்கள் கடுமையான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டவர்கள்.
The post 15 பாலஸ்தீன கைதிகள் துருக்கி வந்தடைந்தனர் appeared first on Dinakaran.