ஜெனிவா: ஐநாவின் ஆதரவுடன் செயல்படும் மனித உரிமைகள் கவுன்சில் காசாவில் ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். அதில், போரின் போது பாலஸ்தீனர்களை தண்டிக்க இஸ்ரேலின் பாதுகாப்பு படைகள் தங்கள் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளின் ஒரு பகுதியாக பாலியல் வன்முறையில் ஈடுபட்டன.
மருத்துவமனைகள்,பெண்களின் சுகாதார வசதிகளை அழித்து இனப் படுகொலைகளை நடத்தியது. இதுகுறித்து கவுன்சிலின் உறுப்பினர் கிறிஸ் சிடோட்டி கூறுகையில் பாலஸ்தீனர்களுக்கு எதிராக இஸ்ரேல் பாலியல் அடிப்படையிலான வன்முறைகளை அதிகளவில் பயன்படுத்தியது என்றார். ஜெனீவாவில் உள்ள இஸ்ரேலிய தூதரகம், இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று மறுப்பு தெரிவித்துள்ளது.
The post 15 மாதங்கள் நடந்த போரின் போது பாலஸ்தீனர்களுக்கு எதிராக பாலியல் வன்முறை: இஸ்ரேல் மீது மனித உரிமை கவுன்சில் கடும் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.