புதுடெல்லி: கடைசியாக நைஜீரியாவுக்கு கடந்த அக்டோபர் 2007இல், அப்போதைய இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் சென்றிருந்தார். இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நைஜீரியா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி, அந்த நாட்டுக்கு 17 ஆண்டுகளுக்குப் பிறகு செல்லும் இந்தியப் பிரதமராகி உள்ளார்.
இந்தப் பயணத்தின்போது இரு நாடுகளும் இருதரப்பு உறவை 'உத்திசார் கூட்டாளித்துவம்' என்ற நிலைக்கு உயர்த்தின. நமது தூரகரக ரீதியான உறவுகள் 'வரலாற்று நட்பில்' இருந்து 'உத்திசார் கூட்டாளித்துவத்துக்கு' மாறியுள்ளன. 1.4 பில்லியன் மக்கள்தொகை கொண்டதாக இந்தியாவும், 220 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நாடாக நைஜீரியாவும் உள்ளன. இவை இரண்டுமே, பல மதங்களையும், பல இனங்களையும் மற்றும் பல மொழிகளையும் சார்ந்த சமூகங்களைக் கொண்ட பெரிய வளரும் ஜனநாயக நாடுகளாகும்.