2008ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளின் போது ஸ்ரீசாந்தை, ஹர்பஜன் சிங் கன்னத்தில் அறைந்த சம்பவம் நடந்தது. இதன் பின்னர் பல தருணங்களில் ஹர்பஜன்சிங் மன்னிப்பு கேட்ட போதும், சமீபத்தில் ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோதியின் நிகழ்ச்சியில் வெளியான வீடியோ மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.