ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) – ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணிகள் மோதுகின்றன.
ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி இந்த சீசனை சிறந்த முறையில் தொடங்கியது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது. 175 ரன்கள் இலக்கை துரத்திய ஆர்சிபி அணி 22 பந்துகளை மீதம் வைத்து வெற்றி கண்டிருந்தது.