சென்னை: வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும், பூம்புகார் மாநில விருதுகளை 9 சிறந்த கைவினைஞர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (பிப்.18) வழங்கி சிறப்பித்தார்.
இது குறித்து தமிழக அரசின் செய்திக் குறிப்பு: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (18.2.2025) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு கைத்திறத் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில், கைவினைத் தொழிலுக்காகவே தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட 65 வயதுக்கும் மேற்பட்ட 9 சிறந்த கைவினைஞர்களுக்கு வாழும் கைவினைப் பொக்கிஷம் விருதுகளையும், கைத்திறத் தொழிலின் பங்களிப்பு, அபிவிருத்தி மற்றும் படைப்புகள் ஆகியவற்றில் சிறந்த 9 கைவினைஞர்களுக்கு பூம்புகார் மாநில விருதுகளையும் வழங்கி சிறப்பித்தார்.