புதுடெல்லி: இந்தியாவும் பாகிஸ்தானும் உடனடி போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டிருக்கும் நிலையில், முன்னெப்போதையும் விட தற்போது அரசியல் கட்சிகளை நம்பிக்கையுடன் வழிநடத்த பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. மேலும், கடந்த 18 நாட்களில் என்ன நடந்தது என்பது குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "முன்னெப்போதும் இல்லாத வகையில் வாஷிங்டனிலிருந்து அறிவிப்புகள் வரும் நிலையில், தற்போது இது தேசிய தேவையாக மாறியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில், தேச நலன் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக, பிரதமர் மோடி மோடி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு தலைமை தாங்கி நாட்டின் அரசியல் கட்சிகளை நம்பிக்கையுடன் அழைத்துச் செல்லவேண்டும்.